முடிவிலா சாத்தியங்கள் (9)

என்னப்பா, எல்லாரும் எப்படி இருக்கீங்க? போன வாரம் கேட்ட கேள்விகளெல்லாம் உங்க உடல் கிட்டே கேட்டீங்களா? எப்படி இருக்கு தகவல் தொடர்பு?

இந்த வாரம் என்னோட பார்ஸ் மாணவர்கள் நிறைய பேர் என்னோட தொடர்பு கொண்டு தங்களோட வாழ்க்கைல நல்ல மாறுதல் வந்திருக்கறதா சொன்னாங்க. இதைவிட சிறப்பாக எப்படி அமையும்? என்னோட தொலைக்காட்சி நேர்முகங்களைப் பார்த்துட்டு இதுவரை எனக்கு 15 நாடுகளிலேர்ந்து அஞ்சல்/ அழைப்புகள் வந்திருக்கு. 11 நாடுகள்லே பார்ஸ் பயிற்சி எடுத்திருக்காங்க. ஒருத்துவத்துக்கு பங்களிப்பா அமையற பாக்கியம் எனக்கு எப்படி கிடைச்சது? நன்றி… நன்றி… நன்றி…

திடீர்னு ஒரு நாள் சிங்கப்பூர்ல இருந்து ஹீலர் பாஸ்கர் பேசினார். மிகவும் எளிமையான மனிதர். சிங்கப்பூர்ல நான் ஆகஸ்ட் 7ம் தேதி நடத்தப் போற வகுப்புக்கு அவரும் வர்றதா சொல்லிருக்கார்… இதைவிட சிறப்பாக எப்படி அமையும்? உங்களுக்கும் விருப்பமிருந்தா கீழே உள்ள சுட்டி மூலமா பதிவு செஞ்சுக்கங்க:

http://www.infinitehealing.co.uk/events/

சிங்கப்பூர் வரும்போது மலேசியாவும் வர்றேன். பார்ஸ் வகுப்போட ஃபவுண்டேஷன் மற்றும் லெவல்1 வகுப்புகளும் தரப்போறேன். நீங்க யாராவது தயாரா இருக்கீங்களா?

சென்ற வாரம் கொஞ்சம் நேரம் இருந்ததால, இரு உரையாடல்கள் பதிவு செய்தோம். பிரிட்டனைச் சேர்ந்த ஆலன் ஜோன்ஸ் என்ற சுகவரோட ‘Self healing & empowerment’ பற்றியும் இந்தியாவைச் சேர்ந்த நர்மதா அக்ஷத் பிரதாப் கூட ‘Healing through spirituality’ என்ற தலைப்பிலும் நடந்த ஆங்கில உரையாடல்களை நம்ம யூட்யூப் சேனல்ல பார்க்கலாம்:

http://www.youtube.com/channel/UCxh43lKZIbHEg_jhz1_Gkgg

சமீபத்தில ஒரு வாசகர் எனக்கு 3 பக்கத்துக்கு ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார் தன்னோட வாழ்க்கை எவ்வளவு மோசமா இருக்கு, அதுக்கான காரணங்கள் என்னென்னு ரொம்ப நுணுக்கமா விளக்கி இருந்தார். அனுப்பிச்சிட்டு ரெண்டு நாள்ல தொலைபேசில அழைச்சு படிச்சிட்டேனான்னு கேட்டார். நான் இல்லைன்னு சொன்னதும் ரொம்ப ஏமாற்றமா ஆயிட்டார்.

திரும்பத் திரும்ப உங்க சோகக் கதையைச் சொல்லும்போது நீங்க அதை வலுப்படுத்தறீங்க இல்லையா? ஏன் அந்தக் கதைக்கு உங்க வாழ்க்கையை பலவீனமாக்கற வலிமையை நீங்க கொடுக்கணும்? ஒரு வேளை அந்தக்கதைக்கு அந்த வலிமையே இல்லைன்னா? ஏன் அதுக்கு வலிமை இருக்கறதா நினைக்கணும்?

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு விபத்துல உடல் கொஞ்சம் சேதமடைஞ்சிருச்சின்னு வச்சிப்போமே. அதனால வாழ்க்கையும் சேதமடைஞ்சிட்டதா ஒரு கண்ணோட்டத்தை ஏற்படுத்திக்கறது நம்முடைய தெரிவுதானே! இதைக் கேட்டு என் மேல கோபம் வரலாம். ஆனா அப்படி ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கறது எந்தவிதத்தில உங்களுக்கு உதவுதுன்னு கேட்டுப் பாருங்க. ‘என் வாழ்க்கை நாசமாப் போச்சு’ங்கற தீர்மானத்திலேர்ந்து ஏன் ‘என் வாழ்க்கையை வளப்படுத்தறதெப்படி’ன்னு கேள்வியா நீங்க மாறக் கூடாது? கேட்டுத்தான் பாருங்களேன்… கேள்விகள் சாத்தியங்களை உருவாக்கும். பதில்களும் தீர்மானங்களும் வழிகளை அடைக்கும். இதை நீங்க அனுபவத்தில புரிஞ்சிப்பீங்க.

‘உடல் உறுப்புகள் சேதமடைஞ்சா வாழ்க்கை முழுமை அடையாது’ங்கறது ஏன் உண்மையா இருக்கணும்? அதை உண்மைன்னு நிரூபிக்கறதுக்காக நீங்க உங்க வாழ்கையை குறுக்கிக்கறது சரியா?

இந்த மாதிரி முன்முடிவுகளிலிருந்தும் அழுத்தமான தீர்மானங்களிலிருந்தும் வெளிவர பார்ஸ் ரொம்ப உதவியா இருக்கும். மிகவும் வலிமையான மன அழுத்தத்தில இருக்கறதா நினைச்சிட்டிருந்த ஒரு வாலிபர் பார்ஸ் மூலமா குணமாகிட்டு வர்றார். அவருடைய தாய் ‘மகிழ்ச்சி வழிமுறை’ங்கற இன்னொரு உடல் செயல்முறையையும் என்கிட்டே கத்துக்கிட்டுப் போய் அவருக்கு சிகிச்சை செய்யறாங்க. நல்ல மாற்றம் இருக்கறதா தெரிவிச்சாங்க. வாழ்க! இதைவிட எப்படி சிறப்பாக அமையும்?

"இந்த உலகத்தில எந்தத் தேவையுமே இல்லைன்னா நீங்க எப்படி/என்னவாக இருப்பீங்க?"ன்னு கேட்டிருந்தேன் முகநூல்ல. இது நிறைய பேருக்கு ஒரு அதிர்வலையை ஏற்படுத்திருச்சு – எனக்கும் சேர்த்துதான். உங்களுக்குள்ள இந்தக் கேள்வி என்ன உணர்வுகளைக் கொண்டு வருது? தேவைகளே இல்லைன்னா என்ன செய்வீங்க?

நாம நம்ம வாழ்க்கையை தேவையை அடிப்படையா வச்சே உருவாக்கறோமோ? ஏன் அது விருப்பத் தேர்வின் அடிப்படையில இருக்கக் கூடாது? இதை நான் கேட்கும்போது நிறையப் பேர், குழந்தைகள் இருந்தா அது சாத்தியமே இல்லைன்னு சொல்வாங்க.
குழந்தைகள் உங்களுடைய தெரிவா இல்லையா? அப்படின்னா அவங்களுக்குச் செய்யற தேவைகளும் அப்படி இருக்கக் கூடாதா? உதாரணத்துக்கு, உங்க குழந்தைக்கு பள்ளிச் சீருடை துவைக்கறது தேவைன்னு நினைச்சுச் செய்யறப்போ எரிச்சலும் அலுப்புமிருக்கும். அதே சமயம், மறுநாள் உங்க குழந்தை பிரதமர் கையால விருது வாங்கப் போகுதுன்னா அதே வேலையை சந்தோஷமா வழக்கத்தைவிட அதிக சிரத்தை எடுத்துச் செய்வீங்களா இல்லையா? வேலை ஒண்ணுதான் – ஆனா உணர்வு வேற வேற…

ஒவ்வொரு வேலையச் செய்யத் துவங்கும்போதும்’ இது என்னுடைய தேவையா, தெரிவா?’ன்னு கேட்டுப் பார்க்கலாம்… அதோடு, இந்த வேலையை எப்படி எளிதாகச் செய்யலாம் என்கிற கேள்வி இன்னும் பல சாத்தியங்களைக் காண்பிக்கக் கூடுமல்லவா?

சரி, அடுத்த வெள்ளி, சனி நாட்கள்ல பாரிஸ்ல தமிழ் வகுப்பிருக்கு. ஐரோப்பியத் தமிழர்கள் யாருக்காவது விருப்பமிருந்தா கலந்துக்கங்க. சென்னையில இருந்தீங்கன்னா, உங்க வீட்டுக்கே வந்து பார்ஸ் சிகிச்சை அளிக்க ரிஷி தயாரா இருக்கார். உங்க வாழ்க்கைல மாற்றம் வேணும்னு நினைச்சீங்கன்னா, நீங்க ஏன் இதை முயற்சித்துப் பார்க்கக் கூடாது?

மறந்துட்டேன்… சிங்கப்பூர் போற வழில கொழும்பு, இந்தியா அல்லது வளைகுடா நாடுகள்ல வகுப்புகள் நடத்தற வாய்ப்பு இருக்குது. எந்த நகரத்துக்கு என்னுடைய பங்களிப்பு வேணும்?

அடுத்த முறை சந்திக்கற வரை கேள்விகளாக வாழ்வோமா?

அபரிமிதமான நன்றியுடன்,
நிலா

https://www.facebook.com/nila.raj.5
https://www.twitter.com/NilaNimi

About The Author

2 Comments

 1. Maithreyi

  Dear Nila, Are there any chances that these classes could be held in Sydney? If so, I would be most interested.
  Kind regards, Maithreyi.

 2. Nila

  மைத்ரேயி,
  வாய்ப்புகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம்தானே? உங்களைப் போல சிட்னியில் எவருக்கேனும் விருப்பமிருந்தால் சொல்லுங்கள். வந்துவிடலாம் 🙂 இல்லை, நீங்கள் சிங்கப்பூருக்கு வாருங்களேன்! ஒரு விடுமுறை எடுத்த மாதிரியும் இருக்குமே… சரி வராதென்றால் சிட்னியில் இருக்கும் பயிற்சியாளர்களை அணுகுங்கள்…

  அன்புடன்,
  நிலா

Comments are closed.