முப்பதாவது வயதில்

இந்த முப்பதை நெருங்கும் வயதில்
நான் மிகவும் அழுகிப் போனவனாக உணர்கிறேன்

நொறுங்கிய மனம்
வைத்தியம் பாராமல்
ஊனம் என்றாயிற்று

பரிசாக அளிக்கப்படும் கோப்பைகளில்
மதுவும் துயரமும் நிரம்பி வழிகின்றன.

மீதமிருந்த கற்பனையும்
ஞானிகளாலும்
நண்பர்களாலும்
சுத்தமாகத் துடைக்கப்பட்டுவிட்டன.

About The Author