முலாம்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

முலாம்பழம் (சுமாரான அளவு) – ஒன்று ,
பால் – 1 1/2 லிட்டர் ,
சர்க்கரை -1 கப் ,
கஸ்டர்ட் பவுடர் – 1 1/2 tspதேக்கரண்டி ,
வெனில்லா எஸ்ஸென்ஸ் – 3 (அ) 4 சொட்டு .

செய்முறை :

முதலில் கஸ்டர்ட் பவுடரையும், சர்க்கரையையும் 2 கப் பச்சைப் பாலில் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். மீதிப் பாலை நன்றாகக் காய்ச்சி அதில் சர்க்கரைக் கலவையைச் சேர்த்து மேலும் கொதிக்க விடவும். பின் கீழே இறக்கி நன்றாக ஆறிய பின்னர் ட்ரேயில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

முலாம்பழத்தைக் கழுவித், தோல் சீவி, விதைப்பகுதியை நீக்கி விட்டுச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து குளிர வைத்த பாலுடன் பழத் துண்டுகளைச் சேர்த்து மூன்று நான்கு நிமிடங்கள் மிக்சியில் அடிக்கவும். மூன்று நான்கு சொட்டுகள் வெனில்லா எஸ்ஸென்ஸ் விட்டு நன்றாகக் கலக்கி விடவும்.

மீண்டும் ட்ரேயில் கொட்டி ஐஸ்கிரீம் தயாரானதும், துண்டுகள் போட்டு, மேலே சீவிய முந்திரி, ,பாதாம்மி பருப்பு கொண்டு அலங்கரிக்கவும்.

About The Author