மைக்ரோவேவ் மைசூர்பாகு

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 1 கப்
பால் – 2 மேசைக்கரண்டி

செய்முறை:

1. கடலை மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய் கலந்து கட்டிகளின்றி நன்றாகப் பிசைந்து, மைக்ரோவேவ் பாத்திரத்தில் கலவையை எடுத்துக் கொள்ளவும்.

2. மைக்ரோவேவில் இரண்டரை நிமிடம் அதிக வெப்பநிலையில் வைக்கவும்.

3. பின் பாத்திரத்தை வெளியில் எடுத்து பாலை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளவும்.

4. மீண்டும் இரு நிமிடங்கள் மைக்ரோவேவில் வைத்து, பின் ஒரு தட்டில் கலவையை ஊற்றவும்.

5. கலவை மீது சில தேக்கரண்டி நெய் விட்டு, சற்று ஆறியபின் துண்டுகளாக்கவும்.

நொடியில் ரெடியாகும் இந்த இனிப்புடன் எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளை மகிழ்வியுங்கள்.”

About The Author

2 Comments

  1. balasubramanian

    பால் 1 கப் அல்லது நெய் 1கப் தயவுசெய்துசொல்லவும்.
    பால் 2 கரன்டியா அல்லது நெய் 2 கரன்டியா?

Comments are closed.