மௌனமாய் உன் முன்னே(3)

உனக்காக
நான் சேமிக்கும் தருணங்களெல்லாம்
எந்தவொரு முன் அனுமதியுமின்றி
பிறரால் கலைக்கப்படுகிறது

நிதானம் சிறிதும் தவறாமல்
அப்பொழுதுகளையெல்லாம்
நேர்த்தியாகவே கையாள்கிறேன்

ஆனால் உனக்கேயான
அத்தருணம்
முற்றிலும் சரியாகவே வாய்க்கும்
பொழுதுகளில் மட்டும்
மனம் நெகிழ்ந்து சற்றே
நிலைகுலைந்து விடுகிறது

அதனை நீ
அறிந்துகொள்ள விடாமல்
மறைக்க முயல்வதிலேயே
முழுகவனமும் இருக்கையில்

கணப்பொழுதில் நேரம்
கடந்து விட
நொடிப்பொழுதில் நீயும்
மறைந்து விடுகிறாய்

மீண்டும் காத்திருப்பு தொடர்கிறது
நமக்கான
மற்றுமொரு தருணத்திற்காய்தொடரும்

(‘மௌனமாய் உன் முன்னே‘ -மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author