ரயில்களை கவனித்தல்

ஒருமுறை சந்தித்தேன்
ஒருவரை ரயிலில்
முகத்தில்
‘எல்லை அடைப்பு’
என்ற முத்திரையுடன்

கம்பிக் கிராதிக்கு
வெளியே
இரும்பு பலகையில்
‘அந்நியர்கள் சட்டத்தின்
முன் நிறுத்தப்படுவர்’
எனும் அறிவிப்பு
தொங்கியது

நடந்தேன்
முடிவற்று நீண்ட
உறுதிமிகு
வேலியையொட்டி
அவ்வப்போது
கவனமாக
உரையாடி
அறுவடைக்குப் பிறகான
எச்சமாய்
கிடந்த
கடின
மண்குவியல்களூடாக
நிலத்துக்குள்
புகுந்துவிடும்
பொய்த்துப் போன
மழையினால்

(சொற்கள் தோற்கும்பொழுது – மின்னூலில் இருந்து)

About The Author