லக… லக… ஜோக்ஸ் (1)

நோயாளி: நான் நிறைய வருஷம் வாழணும். அதுக்கு ஏதாவது மருந்து இருக்கா டாக்டர்?
டாக்டர்: நீ கல்யாணம் செய்துக்க வேண்டிய நேரம் வந்தாச்சு.
நோயாளி: கல்யாணம் செய்துகிட்டா நிறைய வருஷம் வாழலாமா டாக்டர்?
டாக்டர்: ம்ஹூம், இந்த மாதிரியே ஆசையே உனக்கு வராது.

**********

ஆசிரியர்: உங்க அப்பா என்ன செய்யறாரு?
மாணவன்: எங்கப்பா, எல்லோருக்கும் அவங்க அவங்க கஷ்ட நஷ்டங்களை கொண்டு போய் கொடுத்திட்டு இருக்காரு.
ஆசிரியர்: அப்படீன்னா?
மாணவன்: அவரு போஸ்ட்மேனா இருக்காரு டீச்சர்.

**********

பெண்: அப்பா! எனக்கு சென்னையில வேலை செய்யும் மாப்பிள்ளையாப் பாருங்க.
அப்பா: ஏம்மா அப்படி?
பெண்: சென்னையிலதானே கரண்ட் கட் கம்மியா இருக்கு.

**********

மாணவன் – 1: டேய் ப்ளீஸ்டா! இந்த கேள்வியோட பதிலின் ஆரம்பம் மட்டும் என்னன்னு சொல்லுடா!
மாணவன் – 2: (ரொம்பவும் மெதுவாக) இந்த…

*********

ஆசிரியர்: ஹரி! உன்கிட்டே இருக்கும் 10 சாக்லெட்டில், 3 சாக்லெட்டை ரமேஷுக்கும் 3 சாக்லெட்டை மகேஷுக்கும் குடுத்தா உன்கிட்டே எவ்வளவு சாக்லெட்டுகள் மிச்சம் இருக்கும்?
ஹரி: 10 சாக்லெட்டு.
ஆசிரியர்: அதெப்படி?!
ஹரி: என்ன டீச்சர்! நீங்க சொன்னா நான் அவங்களுக்கு குடுத்துடுவேனா? என்னைப் பத்தி உங்களுக்கு எதுவுமே தெரியலையே!

*********

About The Author