லக… லக… ஜோக்ஸ் (10)

கணவன் : கண்ட கண்ட டீத்தூளையெல்லாம் வாங்காதேன்னா கேக்குறியா? பாரு, ஒவ்வொரு தடவை டீ குடிக்கும்போதும் கண்ணு வலி வருது.

மனைவி : எதுக்கும், இனிமே கப்ல இருக்குற ஸ்பூனை எடுத்துக் கீழே வச்சிட்டுக் குடிச்சுப் பாருங்களேன்!

************

ஆசிரியர் : எதுக்குடா ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறீங்க?

சுப்பு : ஒண்ணுமில்ல டீச்சர், கீழே இந்தப் பத்து ரூபா கெடந்ததை நாங்க ரெண்டு பேருமே பார்த்தோம். ரெண்டு பேர்ல யார் பெரிய பொய் சொல்றாங்களோ அவங்களுக்குத்தான் இது சொந்தம்னு முடிவு பண்ணி, ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் பொய் சொல்லிட்டு இருந்தோம். அதில யார் சொன்னது பெரிய பொய் அப்படீங்கிறதிலதான் எங்களுக்குள்ளே சண்டை.

ஆசிரியர் : ச்சே! உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு! உங்க வயசுலல்லாம் எனக்கு ஒரு பொய்கூட சொல்லத் தெரியாது. தெரியுமா?

சுப்பு : ப்பா! டீச்சர், இந்த பத்து ரூபா கண்டிப்பா உங்களுக்குத்தான்.

************

அம்மா : என்ன அதிசயமாக இருக்கு! எப்பவும் ஒரு மணி நேரத்துக்கு மேல ஃபோன்ல பேசுவே. இன்னைக்கு அரை மணி நேரத்துலயே முடிச்சிட்டியே?

மகள் : அது ராங் நம்பர்மா!

************

ஆசிரியர் : உண்மையச் சொல்லு! வீட்டுப்பாடம் பண்ண உங்கப்பா உதவி செஞ்சாரா?

பப்பு : சேச்சே!… முழுக்க அவரேதான் செஞ்சாரு.

************

பேருந்தில் அமர்ந்திருந்த ஒருவர் தன் அருகில் நிற்கும் வயதான பெண்மணியைப் பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டார். அருகில் இருந்தவர்,

நபர் – 1 : ஏன் என்னாச்சு? கண்ல ஏதாவது விழுந்துடுச்சா?

நபர் – 2 : இல்ல… இப்படி வயசானவங்க நிக்கறதைப் பார்த்தா ரொம்பக் கஷ்டமாயிருக்கு. அதான்.

About The Author