லக… லக… ஜோக்ஸ் (101)

மனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு.

கணவன்: எப்படி சொல்ற?

மனைவி: என் சர்க்கரை போடாத காபியை இப்படி புகழ்றாரே!…

******

அம்மா: ஏண்டா, பூனை பாலையெல்லாம் குடிச்சிட்டு போற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தே?

மகன்: இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தேன்.

*****

அப்பா: டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காசை முழுங்கிட்டான்.

டாக்டர்: அப்படியா! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.

அப்பா: காசை மட்டும் எடுங்க டாக்டர்.

*****

நபர்: என்ன இது! பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா?!

பிச்சைக்காரன்: வீட்டிலே போய்க் கேட்டேன். ஐயா ஆபீசுக்கு போயிட்டாங்கன்னு அம்மாதான் சொன்னாங்க!

*****

ஆசிரியர்: என்னடா, போயும் போயும் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் கிடைச்சுருக்கேன்னு யாரும் வருத்தப்படாதீங்க! என் பிரெண்ட் ஒருத்தன் திருச்சில 5000 ரூபாய் வாங்கிட்டு இருந்தான்; இன்னிக்கு மும்பைல 1 லட்சம் வாங்கிட்டுருக்கான்.

மாணவன்: என்ன கடனா?

*****

About The Author