லக… லக… ஜோக்ஸ் (102)

ஆசிரியர்: பூமி உருண்டைங்கிறதுக்கு ஒரு உதாரணம் சொல்லு?

மாணவி: பூமி உருண்டைன்னு நான் சொல்லவே இல்லையே டீச்சர்!

*****

நபர்-1: ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக்கிட்டிருக்கு!

நபர்-2: அதே வாட்சா?

நபர்-1: இல்லே, காவேரி.

*****

பெண்: டாக்டர், என் புருஷன் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார்.

டாக்டர்: நீங்க ஏன் பார்க்கறீங்க?

*****

அம்மா: சாப்பாட்டுத் தட்டு மேலே ஸ்கேலை வச்சுக்கிட்டு என்ன பண்றே?

மகன்: நீங்கதான அளவோட சாப்பிட சொன்னீங்க. அதான் ஸ்கேலால அளந்து அளந்து சாப்பிடறேன்.

******

நபர்: என்ன! பால் ஒரு லிட்டர் அம்பது ரூபாயா!

பால்காரர்: பின்னே? தண்ணி பஞ்சமாச்சே சார்!

******

About The Author