லக… லக… ஜோக்ஸ் (106)

சிறுவன்-1: எங்கப்பா சரியான கஞ்சன்!

சிறுவன்-2: அப்படி என்ன செஞ்சாரு?

சிறுவன்-1: எனக்கு பேதி மருந்து வாங்கி தர மனசில்லாம, நடு ராத்திரியில எழுப்பி பேய்க் கதை சொல்றாருன்னா பாரேன்.

==========

நண்பன்-1: நம்ம கிரிக்கெட் டீம் அபாரமா ஜெயிடுச்சுன்னு ஏண்டா பொய் சொன்ன?

நண்பன்-2: உன் விக்கலை நிறுத்த எனக்கு வேற வழி தெரியலைடா!

==========

ஆசிரியர்: 20 ரூபா குடுத்து 15 ரூபாய் டிக்கெட் வாங்கற. கண்டக்டர் உனக்கு மீதி எவ்வளவு தருவாரு?

மாணவன்: சில்லரை இல்லேன்னு சொல்லிடுவாரு.

==========

நபர்: எனக்கு எதாவது லெட்டர் வந்திருக்கா?

அஞ்சல்காரர்: உங்க பேர் என்ன?

நபர்: அதுதான் லெட்டர் மேலேயே எழுதியிருக்குமே!

=========

நபர்-1: பால்காரர் ஏன் ஒரு டான்சரையும், பாடகரையும் வீட்டிலேயே சம்பளம் குடுத்து வச்சிருக்காரு?

நபர்-2: ஆடிக் கறக்கற மாட்டை ஆடிக் கறக்கறதுக்கும், பாடிக் கறக்கற பாட்டை பாடிக் கறக்கறதுக்கும்தான்.

==========

About The Author