லக… லக… ஜோக்ஸ் (107)

சிறுவன்-1: எங்க அப்பா பத்து வருஷமா வியாபாரம் செய்யறாரு. ஆனா சேமிப்பே இல்லை.

சிறுவன்-2: ஏன்?

சிறுவன்-1:
ஏன்னா, அவர் செய்யறது சேமியா வியாபாரம்.

=========

திருடன்: பாப்பா! உனக்கு எவ்ளோ சாக்லெட் வாங்கித் தந்திருக்கேன்! இப்பவாவது சொல்லு, உங்க வீட்டுல நகையெல்லாம் எங்கே வச்சிருக்காங்க?

சிறுமி:
அடகுக் கடையில.

=========

ஆசிரியர்: உன்னோட அப்பா ஒரு நிலத்தை 40,000 ரூபாய்க்கு வாங்கி 70,000 ரூபாய்க்கு வித்தா அவருக்கு எவ்ளோ லாபம் கிடைக்கும்னு கேட்டிருந்தேன். 1000 ரூபாய்னு பதில் எழுதியிருக்க! அது எப்படி?

மாணவன்:
மீதி 29,000 ரூபாயை அவர் கணக்கிலே காட்ட மாட்டாரு.

=========

மனைவி: ஏன் தண்ணியில பச்சை இங்க்கை ஊத்திக் கலக்கறீங்க?

கணவன்: டாக்டர்தான் மாத்திரையை பச்சைத் தண்ணியில போடச் சொன்னாரு.

=========

கணவன்: கப் போர்டு வாங்கியாச்சு. அடுத்து என்ன வாங்கப் போறே?

மனைவி: வேற என்ன, ஸாசர் போர்டுதான்!

=========

About The Author