லக… லக… ஜோக்ஸ் (108)

பரிமாறுபவர்: நீங்க போன பந்தியிலேயும் உட்கார்ந்து சாப்பிட்டீங்கல்ல?

விருந்தினர்:
என்ன செய்யறது, பொண்ணு, மாப்பிள்ளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேனே!

==========

சோதிடர்: உங்க கைரேகைப்படி இன்னும் ஆறு மாசத்துக்கு உங்களுக்கு ரொம்ப கஷ்டமான நேரம். கொஞ்சம் பல்லை கடிச்சிட்டு இருந்தீங்கன்னா அப்புறம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

நபர்: எது பல்லா?

==========

காவலர்: எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலையை திருடினே?

திருடன்: இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு. அதான், தொழிலுக்கு ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டுமேன்னு…

==========

பாடகர்: நேத்து கச்சேரியிலே நான் முதல் பாட்டைப் பாடி முடிச்சதும் எல்லோரும் விடாம கை தட்டினாங்க தெரியுமா?

நண்பர்: எப்படி… அடுத்த பாட்டை பாட விடாம கைதட்டினாங்களாக்கும்?

==========

கணவன்: என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தினு சொல்லியிருக்காங்க.

மனைவி: இது மாதிரி ஏதாவது இருக்கும்னு தெரிஞ்சுதான் நான் எப்பவுமே இந்த ஜோசியம், ஜாதகம் இதையெல்லாம் நம்பறது இல்லை.

=========

About The Author