லக… லக… ஜோக்ஸ் (109)

நண்பன்-1: சாதாரணமானவங்க டைனிங் டேபிளை பிளைவுட்ல செய்வாங்க. அதையே நடிகர் நடிகைங்க செஞ்சா?…

நண்பன்-2: ஹாலிவுட்ல செய்வாங்க.

==========

அப்பா: (அடித்துக்கொண்டே) ஏண்டா பொய் சொன்ன? இனிமே சொல்லுவியா?… சொல்லுவியா?

மகன்: கண்டிப்பா பொய் சொல்லுவேன்பா!

அப்பா: என்ன திமிருடா உனக்கு! இவ்வளவு அடி வாங்கியும் புத்தி வரலையா?

மகன்
: இனிமே பொய் சொல்லமாட்டேன்னு சொன்னா அது பொய் இல்லியா அப்பா?

==========

நண்பர்-1: ஐப்பசியில் எல்லோருக்கும் ஓசியிலே டிபன் கிடைக்கும்.

நண்பர்-2: எப்படி?

நண்பர்-1: அப்போதான் ‘அடை’ மழை பெய்யுமே!

==========

டாக்டர்: லாட்டரி டிக்கட்ல பரிசு விழுமோ விழாதோன்னு ரொம்ப கவலைப்பட்டுதான் நீங்க இவ்ளோ இளைச்சிருக்கீங்க. இந்த சிரப்பை தினம் ரெண்டு வேளை, நல்லா மூணு, நாலு தடவை குலுக்கிட்டு குடிங்க.

நோயாளி:
இந்த குலுக்கல்லையாவது பரிசு விழுமா டாக்டர்?

==========

ஆசிரியர்: ஏண்டா ‘திரு திரு’ன்னு முழிக்கறே?

மாணவன்: பின்னே, ‘திருமதி திருமதி’ன்னா சார் முழிக்க முடியும்?

==============

About The Author