லக… லக… ஜோக்ஸ் (110)

கணவன்: இன்னைக்கு நான் பேசறது நியூசென்ஸா இருக்குன்னு சொல்றியே, நேத்து வரைக்கும் நான் பேசினது…?

மனைவி: ஓல்டு சென்ஸா இருந்தது.

==========


நோயாளி:
எனக்கு எப்போ உடம்புக்கு வந்தாலும் நான் உங்ககிட்டதான் வருவேன் டாக்டர்.

டாக்டர்:
எம்மேல உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?

நோயாளி:
கண்டிப்பா! உங்களுக்கு வர்ற ஒரே பேஷண்டை நீங்க அவ்வளவு சீக்கிரம் நீங்க சாக அடிச்சுடுவீங்களா என்ன?

==========

காதலி: நம்ம பெத்தவங்க சம்மதிச்சா கல்யாணம். இல்லைனா தற்கொலை பண்ணிக்குவோம். சரியா?

காதலன்: ரெண்டுமே ஒண்ணுதான்.

==========

பெண்: இன்னைக்கு என்ன புது சமாச்சாரம்?

வேலைக்காரி: இன்னைக்கு எனக்கு நிறைய வேலை இருக்கு. அதனால அக்கம்பக்கத்து சமாச்சாரத்தயெல்லாம் இந்த சி.டி-ல பதிவு பண்ணியிருக்கேன். போட்டுக் கேட்டுக்குங்க!

==========

மனைவி: காலேஜ் வரைக்கும் படிக்க வெச்சு என்ன புண்ணியம்! நம்ம பையனுக்கு ‘ஸ்ரீராமஜெயம்’ கூட சரியா எழுதத் தெரியல. ‘ரமாஜெயம்’னு எழுதறான்.

கணவன்:
அவன் சரியாத்தாண்டி எழுதறான். அது பக்கத்து வீட்டுப் பொண்ணு பேரு.

==========

About The Author