லக… லக… ஜோக்ஸ் (19)

கணவன்: மண்டபத்துக்குள்ளே போகாதே! உள்ளே போனா அவ்வளவுதான். உன் வாழ்க்கையே முடிஞ்சுது.

மனைவி: என்னங்க ஆச்சு? என்ன பார்த்துட்டு இருக்கீங்க?

கணவன்: நம்மோட கல்யாண சி.டி-யை பார்த்துட்டு இருக்கேன்.

***********

விமான நிலையத்துக்குத் தொலைபேசிய ஒருவர்,

நபர்: சென்னையில இருந்து பெங்களூரு போக எவ்வளவு நேரம் ஆகும்?

பணியாளர்: ஒரு மணி நேரம் ஆகும் சார்!

நபர்: அவ்வளவுதானா? அதுக்கு எதுக்கு நான் இவ்வளவு செலவு செய்யணும்? நான் நடந்தே பெங்களூரு போயிடறேன்.

***********

மகன்: அப்பா! இந்த வடையில இருக்குற ஓட்டை எனக்கு வேண்டாம்பா!

அப்பா: சரிடா! ஒண்ணும் பிரச்சினையில்ல. ஓட்டையைத் தூக்கிப் போட்டுட்டு மத்ததெல்லாம் சாப்பிடு!

***********

மேஜிக் செய்பவர்: இப்போ இந்தப் பொண்ண நான் ரெண்டா வெட்டப் போறேன்.

நபர்: ஒரு பிரச்சினைய ரெண்டு பிரச்சினையா மாத்தறதுக்குப் பேரு மாஜிக்கா?

***********

நண்பன் – 1: நான் என்னோட பி.ஏ-வைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது ரொம்பப் பெரிய தப்பு.

நண்பன் – 2: பின்ன ஏன் பண்ணிக்கிட்ட?

நண்பன் – 1: என்ன செய்யறது? கல்யாணத்துக்கு அப்புறமும் அவ என் பேச்சைக் கேப்பான்னு நெனைச்சேன்.

About The Author

1 Comment

Comments are closed.