லக… லக… ஜோக்ஸ் (20)

நண்பன் – 1: டேய் மச்சான்! நேத்து உங்க வீட்டுக்குப் போய் உன்ன எங்கனு கேட்டேன். அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேயப் போய் இருக்கும்னு சொன்னாரு". எனக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சுடா!

நண்பன் – 2: அது கூடப் பரவாயில்லை மாப்பிள! நான் திரும்பிப் போனதும் "உன்னைத் தேடி ஒரு எருமை வந்துச்சு"ன்னு சொன்னாருடா!

************

நோயாளி: டாக்டர்! நீங்க எழுதிக் குடுத்த மருந்து எந்தக் கடையிலுமே கிடைக்கலை.

மருத்துவர்:
பேனா ஒழுங்கா எழுதலைன்னு கிறுக்கிப் பார்த்த பேப்பரை எடுத்துட்டுப் போனவர் நீங்கதானா?

************

காதலி:
நீங்க எனக்கு லவ் லெட்டர் கொடுத்த விஷயம் எங்க வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு.

காதலன்:
ஐயையோ! உன் தங்கச்சிக்குமா?!

************

மனைவி: ஏங்க, வண்டியைக் கொஞ்சம் மெதுவாதான் ஓட்டுங்களேன்! எனக்கு பயம்மா இருக்கு!

கணவன்:
பயமா இருந்துச்சுன்னா என்னை மாதிரி கண்ண மூடிக்கோ!

************

நண்பன் – 1: நேத்து பொண்ணு பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா!

நண்பன் – 2:
பொண்ணு அவ்ளோ அழகா?

நண்பன் – 1:
இல்லடா… விஷயம் தெரிஞ்சு என் பொண்டாட்டியும் அங்கே வந்துட்டா!

About The Author