லக… லக… ஜோக்ஸ் (21)

மனைவி: டாக்டர்! என் புருஷன் தலையிலிருந்து ரத்தமா வருது. கொஞ்சம் பாருங்களேன்!

டாக்டர்: என்னங்க இது, உங்க புருஷன் மண்டை ஒடஞ்சிருக்கு! இவ்வளவு ரத்தம் வர வரைக்கும் என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

மனைவி: அடிச்சுகிட்டே இருந்தேன் டாக்டர்!

*********

நண்பர் – 1: நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா!

நண்பர் – 2: அப்படீன்னா கார் ஓட்டிப் பாரேன்!

************

நண்பன் – 1: ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். வெறும் டீ மட்டும்தானா மச்சீ?

நண்பன் – 2: வேற என்ன வேணும்?

நண்பன் – 1: கடிக்க ஏதாவது…?

நண்பன் – 2: நாய் இருக்கு… அவுத்துவிடவா?

*********

நண்பன் – 1: என் ஒசத்தியான நாய் எங்கேயோ காணாமப் போயிருச்சு.

நண்பன் – 2: பேப்பர்ல விளம்பரம் கொடுத்துப் பார்க்கறதுதானே?

நண்பன் – 1: மடத்தனமா பேசாதே! அதுக்குப் படிக்கத் தெரியாது.

**********

கணவன்: உடம்பு இளைக்கறதுக்கு ஏதாவது முயற்சி பண்ணக்கூடாதா?

மனைவி: அதனால உனக்கென்ன?

கணவன்: நாலுபேர் எதிர்ல உன்னை தூக்கி வைச்சுப் பேச முடியலையே!

About The Author

1 Comment

  1. Mamallan

    ரூம் போட்டு யோசிப்பிங்களோ ? அனைத்தும் சூப்பர்

Comments are closed.