லக… லக… ஜோக்ஸ் (22)

ஒரு துணிக்கடையில் மனைவியரைத் தொலைத்துவிட்ட இரு கணவன்மார்…

கணவன் – 1: உங்க பொண்டாட்டி எப்படி இருப்பாங்க?

கணவன் – 2: சிவப்பா, உயரமா, திரிஷா மாதிரி இருப்பாங்க. ஆமா, உங்க வீட்டம்மா எப்படி இருப்பாங்க?

கணவன் – 1: அந்தக் கழுதை எப்படி இருந்தா என்ன? வாங்க… உங்க பொண்டாட்டியைத் தேடுவோம்!

************

கணவன்: என்னைப் பார்த்த உடனே கண்ணாடிய எடுத்துப் போட்டுக்கிறியே, ஏன்?

மனைவி: டாக்டர்தான் தலைவலி வர்றப்பல்லாம் கண்ணாடி போடச் சொன்னார்.

************

மனைவி: நம்ம பையன்கிட்ட என்ன சொன்னீங்க? திடீர்னு இப்படி மிரண்டு அழறானே!

கணவன்: பேய்க் கதை சொல்ல சொன்னான். நான் உன்னைப் பத்திச் சொன்னேன். அதான் மிரண்டு போய்ட்டான்.

************

நண்பன் – 1: புருஷனுங்கல்லாம் ஸ்பிளிட் ஏசி மாதிரி மச்சான்!

நண்பன் – 2: ஏன்?

நண்பன் – 1: வெளியிலதான் சவுண்டு ஜாஸ்தியா இருக்கும். ஆனா வீட்டுக்குள்ள படு கூலா, அமைதியா, கன்ட்ரோலா இருப்பாங்க!

************

நண்பர் – 1: உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே?

நண்பர் – 2 : ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!

About The Author

1 Comment

  1. Mamallan

    மனைவிகளை ஏன் எப்படி துவைத்து எடுக்குறீங்க, நல்ல சிரிப்புதான்

Comments are closed.