லக… லக… ஜோக்ஸ் (25)

டி.டி.ஆர்: ஏன்யா, வித்தவுட்லே போறே… இதிலே ஏ.சி கேக்குதா?

பயணி: எதிலேயும் நான் கொஞ்சம் கௌரவமா நடந்துக்குவேன் சார்!

************

நண்பர் – 1: பொண்ணுக்கு 30 லட்ச ரூபாய் செலவு பண்ணிக்
கல்யாணம் பண்ணீங்களே… பொண்ணு எப்படி இருக்கா?

நண்பர் – 2: அவ நல்லாத்தான் இருக்கா. மாப்பிள்ளைதான், “50
லட்ச ரூபாய் தர்றேன். எப்பிடியாவது என்னைக் காப்பாத்துங்க
மாமா!”ன்னு கெஞ்சறார்.

*************

பயணி – 1: ஏன் சார், பிளேன்ல முதல் முதலா நாடகம் நடக்குது. எல்லோரும் சிரிச்சிக்கிட்டு இருக்காங்க. நீங்க மட்டும் சீரியஸா இருக்கீங்களே!

பயணி – 2: விஷயம் தெரிஞ்சா நீங்களும் சிரிப்பை நிறுத்திடுவீங்க!

பயணி – 1: ஏன், என்ன?

பயணி – 2: ஹீரோ வேஷத்துல நடிச்சிக்கிட்டு இருக்கறது நம்ம பைலட்!

************

திருடன்: அம்மா! இந்தப் பக்கம் போலீஸ்காரர் யாரையாவது பார்த்தீங்களா?

பெண்: இல்லையே!

திருடன்: அப்பிடீன்னா, மரியாதையா நகையெல்லாம் கழட்டிக் குடுங்க!

************

நண்பன் – 1: டெய்லி இந்த ஓட்டலுக்கு வந்து, கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு, எதுவுமே சாப்பிடாம போயிடுறியாமே ஏன்?

நண்பன் – 2: ஒரு மாசத்துக்கு, ஓட்டலுக்குப் போய் எதுவுமே சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரே!

About The Author