லக… லக… ஜோக்ஸ் (28)

நபர் – 1: அந்தத் தலைவருங்க ரெண்டு பேரும் கிளாஸ்மேட்னு சொல்லிக்கிறாங்களே… எந்தப் பள்ளியிலே படிச்சாங்க?
நபர் – 2: சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில!

**********

கணவன்: ஏண்டீ! என் கல்யாணப் பட்டு வேட்டி பத்திரமா இருக்கா?
மனைவி: இல்ல, பாத்திரமா இருக்கு.

**********

மனைவி: கொஞ்ச நாளைக்கு, என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிக்கவாவது செய்யுங்களேன்!
கணவன்: ஏன்?
மனைவி: பின்ன… நீங்க என்கூட சந்தோஷமா இருக்கிறதைப் பார்த்துட்டுத்தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே!

**********

டாக்டர்: உங்க வீட்டுல யாருக்காவது சுகர் இருக்கா?
நபர்: எனக்கு ரெண்டு மூணு வீடு இருக்கு… நீங்க எந்த வீட்டைக் கேக்கறீங்க டாக்டர்?

**********

போலீஸ்: செல்போன்ல பேசிக்கிட்டே வண்டி ஓட்டினா அபராதம்னு உனக்குத் தெரியாதா?
நபர்: தெரியும். ஆனா நான்தான் பேசவேயில்லையே, என் பொண்டாட்டி திட்டறதைக் கேட்டுக்கிட்டுதானே இருக்கேன்!

About The Author

1 Comment

  1. Rishaban

    நான்தான் பேசவேயில்லையே, என் பொண்டாட்டி திட்டறதைக் கேட்டுக்கிட்டுதானே இருக்கேன்!
    அதானே.. பேசினாத்தானே வம்பு. – ரிஷபன்

Comments are closed.