லக… லக… ஜோக்ஸ் (29)

ஜோதிடர்: நீங்க இப்ப ரொம்பப் பெரிய கண்டத்துல இருக்கீங்க…
நபர்: ஆமா! நானும் படிச்சிருக்கேன், ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!

**********

காவலர்: சார்! செத்தவன் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலைமறைவாகிட்டான். இப்ப என்ன சார் பண்றது?
ஆய்வாளர்: ‘கொலையானவனும் கொலையாளியும் சமாதானமாகிவிட்டனர்’னு ஃபைலை க்ளோஸ் பண்ணிடு!

**********

டாக்டர்: எதுக்கு உங்க பையனோட பிராக்ரஸ் ரிப்போர்ட்டோட வந்திருக்கீங்க?
நபர்: நீங்கதானே டாக்டர் எல்லா ரிப்போர்ட்சும் எடுத்துக்கிட்டு ட்ரீட்மென்டுக்கு வரச் சொன்னீங்க!

**********

டாக்டர்: உங்க கிட்னி டோட்டலா டேமேஜ் ஆகிடுச்சு.
நபர்: சரி… சரி… ஆஃப் ரேட்டுக்காவது எடுத்துக்கங்க டாக்டர்!

**********

வங்கி அதிகாரி: ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே… முன் அனுபவம் இருக்கா?
நபர்: இருக்கு சார்… இதே மாதிரி பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!

About The Author

1 Comment

  1. Aashik Rahman

    மிகவும் அருமையான நகைச்சுவை துணுக்குகள்.

Comments are closed.