லக… லக… ஜோக்ஸ் (31)

நண்பன் – 1: டேய்! ஏன் அந்தச் சர்க்கரை டப்பாவுக்கு ஊசி போடுறே?!
நண்பன் – 2: டாக்டர்தான் சர்க்கரைக்கு தினமும் ஊசி போடணும்னு சொன்னாரு!

**********

நபர் – 1: புத்தகம் படிச்சதுக்காக டாக்டரை கைது பண்ணிட்டாங்களா?! அப்படி என்ன புத்தகம் படிச்சார்?
நபர் – 2: முப்பது நாளில் டாக்டர் ஆவது எப்படி.

**********

பெண் – 1: கல்யாணத்துக்கு அப்புறம் நான் அவருக்கு அடங்கி நடக்கணுமாம்; அவரு சொல்படி எல்லாம் நடக்கணுமாம். என் காதலர் சொல்றார்!
பெண் – 2: அப்படிப்பட்டவனை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கப் போற?
பெண் – 1: அந்த ஆள் அப்படி நினைக்கிறது எவ்வளவு தப்புன்னு அவருக்குப் புரிய வைக்க வேணாமா?

**********

நர்ஸ்: எதுக்கு டாக்டர் என்னை உங்ககூட வர வேணாம்னு சொல்றீங்க?
டாக்டர்: நீ வந்தா பேஷண்டுங்களோட பி.பி எகிறிடுது. என்னால சரியான பி.பி-யைக் கண்டுபிடிக்கவே முடியலை!

**********

நபர் – 1: நீங்க கடன் வாங்கி வீடு கட்டினீங்க சரி… வீட்டு வாசல்படியை ஏன் பின்பக்கம் வெச்சிருக்கீங்க?
நபர் – 2: நாளைக்கு ஒரு கடங்காரனும் வீட்டு முன்னாடி வந்து நிக்கக்கூடாது பாருங்க!

About The Author

1 Comment

  1. Aashik Rahman

    மிகவும் அருமையான் நகைச்சுவை துணுக்குகள்.

Comments are closed.