லக… லக… ஜோக்ஸ் (32)

நபர் – 1: ஏதோ உங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலதான் கொஞ்சம் மழை பெய்யுது!
நபர் – 2: அப்படியா… இல்லைன்னா?
நபர் – 1: நிறையவே பெய்யும்!

**********

தோழி – 1: நான் சாப்பாடு பரிமாறும்போது என் புருஷன் சிரிச்சுக்கிட்டே சாப்பிடுவாரு.
தோழி – 2: உன் புருஷன்கிட்டே எனக்குப் புடிச்ச விஷயமே அதான். எவ்ளோ கஷ்டம் வந்தாலும் சிரிச்ச முகமா இருப்பாரு.

**********

நோயாளி: சிஸ்டர்! நான் ஆப்ரேஷன் முடிஞ்சு, நல்லபடியா வீடு போய் சேருவேன்ல?
நர்ஸ்: கவலைப்படாதீங்க! கண்டிப்பா, நல்ல ‘பாடி‘யா வீடு போய் சேருவீங்க!

**********

மனைவி: என்னங்க இது, பெட்ல மாத்திரைங்களை அள்ளிப் போடுறீங்க?
கணவன்: படுக்கும்போது இந்த மாத்திரைங்களைப் போட்டுக்கிட்டுப் படுக்கணும்னு டாக்டர்தாண்டி சொன்னார்!

**********

கணவன்: அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காரே!
மனைவி: எப்படி சொல்றீங்க?
கணவன்: பாரு… மாத்திரையெல்லாம் ‘சீரியலுக்கு முன்’ ‘சீரியலுக்குப் பின்’னு
எழுதிக் கொடுத்திருக்காரே!

About The Author