லக… லக… ஜோக்ஸ் (33)

நண்பன் 1 : புதுசா கார் வாங்கியிருக்கிற நம்ம சுரேசுக்கு காரைப் பற்றி எதுவுமே தெரியாது போலிருக்கே…?
நண்பன் 2 : எதை வச்சு சொல்ற?
நண்பன் 1 : வண்டியில் ஸ்பீடு பிரேக்கர் எங்கேயிருக்குன்னு கேட்கறாரே…?

****************

நோயாளி : டாக்டர்.. எனக்கு வயித்துல ஆபரேஷன் நல்லா பண்ணியிருக்கீங்களா? தையல் நல்லா போட்டுருக்கீங்கதானே?
டாக்டர் : என் மேல நம்பிக்கையில்லைனா ரெண்டு டம்ளர் தண்ணி குடிச்சு பாரேன்.. ஒழுகுதான்னு..!!

****************

நபர் 1 : கோழியினாலே முட்டை வந்ததா? அல்லது முட்டையினாலே கோழி வந்ததா?
நபர் 2 : கோழியினால்தான் முட்டை வந்தது
நபர் 1 : எப்படி?
நபர் 2 : ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை!!

****************

டாக்டர் : நீங்க பிழைக்கிறது கஷ்டம்…
நோயாளி : ஏன் டாக்டர்?
டாக்டர் : ஸ்டெதாஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே…!!

****************

நண்பன் 1 : ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்?
நண்பன் 2 : நீ சொல்றதை உன் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை! உன் பேச்சை உன் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை!!

About The Author