லக… லக… ஜோக்ஸ் (43)

டாக்டர்: நீங்க இவரை ஒரு மணி நேரம் முன்னாடி கொண்டு வந்திருந்தீங்கன்னா கண்டிப்பாகக் காப்பாத்தியிருக்கலாம்.

நோயாளியின் உறவினர்: அதுக்கென்ன செய்ய? இவருக்கு விபத்து நடந்தே கால்மணி நேரந்தானே ஆச்சு!

                                                                              *****

நோயாளி: டாக்டர்! நீங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே, அந்த வேலை முடிஞ்சுதா?

டாக்டர்: இன்னும் இல்லை. நீங்க ஏன் தினமும் இதையே கேட்கறீங்க?

நோயாளி: என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்.

                                                                               *****

நர்ஸ்: டாக்டர்! இந்த நோயாளிக்கு ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயக்கமே வரலை.

டாக்டர்: ஊசியோட விலையைச் சொல்லு, உடனே மயங்கி விழுந்துடுவாரு.

                                                                                *****

நபர் – 1: அவர் போலி டாக்டர்னு நினைக்கிறேன்.

நபர் – 2: எப்படிச் சொல்றீங்க?

நபர் – 1: ‘எங்கள் மருத்துவமனையில் டி.டி.எஸ் எஃபெக்ட் உள்ள ஆபரேஷன் தியேட்டர் உள்ளது’ன்னு விளம்பரம் கொடுத்திருக்காரே!

                                                                                 *****

டாக்டர்: அந்த நோயாளிக்கு என் மேல கோபம் போல தெரியுது.

நர்ஸ்: எப்படிச் சொல்றீங்க?

டாக்டர்: நாக்கை நீட்டச் சொன்னா, துருத்திக் காட்டறாரே!

                                                                               *****

About The Author