லக… லக… ஜோக்ஸ் (45)

நோயாளி: டாக்டர்! எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை.

டாக்டர்: அப்போ ஆப்ரேஷன் முடிஞ்சதும் பாடியை நான் யார்கிட்டே ஒப்படைக்கிறது?

                                                                 *****
                        
நர்ஸ் – 1: நம்ம டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது.

நர்ஸ் – 2: ஏன்?

நர்ஸ் – 1: சொந்தக்காரங்க எல்லோருக்கும் அவரே ஆப்ரேஷன் பண்ணி எல்லார் கதையையும் முடிச்சுட்டார்!

                                                                *****
     
டாக்டர்: உங்க வீட்டுக்காரர் நாடக நடிகரா?

பெண்: எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

டாக்டர்: ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது என் இதயத்தில இருக்குற என் மனைவிக்கு காயம்படாம பார்த்துக்குங்கன்னு சொன்னாரே!

                                                               ***** 

நபர் – 1: அந்த டாக்டர் சட்டமும் படிச்சிருக்காரு தெரியுமா?

நபர் – 2: எதுக்காக?

நபர் – 1: ஆப்ரேஷன் பண்ணிக்க வர்றவங்களுக்கு அவரே உயில் எழுத வசதியாக இருக்கும் பாரு!

                                                             *****

சர்வர்: ஏன் சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்க? ஒருநாளாவது சூடா இங்கேயே சாப்பிடலாமே?

வாடிக்கையாளர்: டாக்டர் என்னை ஹோட்டல்ல எதுவும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்காரே!

                                                             *****    

About The Author