லக… லக… ஜோக்ஸ் (46)

நோயாளி: பல்லைப் பிடுங்கினதுக்கு அப்புறம் வலி இருக்குமா டாக்டர்?

டாக்டர்: பல்லை பிடுங்கினதுக்கு அப்புறம் அதுக்கு வலிச்சா என்ன, வலிக்காட்டி உங்களுக்கு என்ன?

                                                                             *****

டாக்டர்: வாய்ல ஏன் கட்டு போட்டிருக்கீங்க?

நோயாளி: நீங்கதானே டாக்டர் போன தடவை வந்தப்போ, எனக்குக் கொழுப்பு அதிகமாயிடுச்சு வாயைக் கட்டணும்னு சொன்னீங்க?

                                                                             *****

டாக்டர்: உங்க பிரச்சினைக்கு என்ன காரணம்னு தெரியலை. ஒரு வேளை அளவுக்கதிமாக் குடிச்சதால இருக்கலாம்னு நினைக்கிறேன்.

நோயாளி: பரவாயில்லை டாக்டர். நீங்க எப்போ குடிக்காம இருப்பீங்கன்னு சொல்லுங்க, நான் வரேன்.

                                                                             *****

நோயாளி: எனக்குப் பல் ரொம்ப வலிக்குது டாக்டர்!

டாக்டர்: கவலைப்படாதீங்க! வலிக்கிற பல்லை பிடுங்கிடலாம்.

நோயாளி: நல்லவேளை! நீங்க கண் மருத்துவத்துக்குப் படிக்காம போனீங்களே!

                                                                              *****

மனைவி
: டாக்டர்! என் கணவருக்கு சில நேரங்கள்ல என்னை அடையாளம் தெரியறதில்லை போலிருக்கு.

டாக்டர்: எதை வெச்சு சொல்றீங்க?

மனைவி
: சில சமயங்கள்ல அவர் என்னைப் பார்த்துப் பயப்படமாட்டேங்கறாரு.

                                                                             *****

About The Author

1 Comment

Comments are closed.