லக… லக… ஜோக்ஸ் (48)

நர்ஸ் – 1: என்ன எல்லா நோயாளிகளும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க?

நர்ஸ் – 2: இன்னிக்கு டாக்டர்கள் வேலைநிறுத்தமாமே.

                                                                      *****

நபர் – 1: அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே?

நபர் – 2: சுகர் டெஸ்ட் செய்ய எவ்வளவுன்னு கேட்டா ஒரு கிலோவுக்கு இருவது ரூபாய்ன்னு சொல்றாரே!

                                                                    *****    

நபர் – 1: ஒரு டாக்டர் கதை எழுதினா அத்தியாயங்களை எப்படிப் பிரிப்பார்?

நபர் – 2: சாப்பாட்டுக்கு முன் – சாப்பாட்டுக்குப் பின்னுன்னுதான்.

                                                                   ***** 

கணவன்: அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்பச் சொல்லி லெட்டர் போட்டிருக்காங்க.

மனைவி: சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க. எல்லாம் சரியாப் போயிடும்.

கணவன்: நீ சொல்றதும் சரிதான். நீ சொன்னபடியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுர்றேன்.

                                                                 *****    

கணவன்: குழந்தையை டாக்டர்கிட்டே கூட்டிடுட்டு போனியே, ஊசி போட்டாரா? பையன் அழறான்?

மனைவி: நீங்க வேற! அவர்தான் குழந்தை டாக்டர் ஆச்சே. இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார். அதான் அழறான்.

                                                                 *****

About The Author