லக… லக… ஜோக்ஸ் (49)

கணவன்: நம்ம வீட்டுக்கு எங்க மானேஜரை சாப்பிட கூப்பிட்டிருக்கேன்.

மனைவி: என்ன திடீர்னு…?

கணவன்: தினமும் சாப்பிடும்போது அவர் மனைவியோட சாப்பாட்டை குறை சொல்லிக்கிட்டே இருக்கார், அதான்.

                                                                              ******

மனைவி: போதை அதிகமானா இப்படியா செய்வீங்க?

கணவன்: ஏன்? என்ன ஆச்சு?

மனைவி: உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்லை கெரஸின் பாட்டில்.

                                                                                ******

கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட மட்டும் நீ காரணமேயில்லாம எப்போப் பார்த்தாலும் சண்டை போடறியாமே. ஏன்?

மனைவி: நான் என்ன செய்யறது? அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே.

                                                                                 ******

மனைவி: எதுக்குங்க மருந்து சாப்பிடும்போது ஸ்பூனை பாதியா உடைக்கிறீங்க?

கணவன்: டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு.

                                                                               ******

கணவன்: என் அம்மா மேலே உனக்குக் கொஞ்சம்கூட மரியாதையே இல்லை.

மனைவி: என்னங்க இப்படி சொல்லிட்டீங்க! தினமும் மனசுக்குள்ள உங்க அம்மா படத்துக்கு ஊதுபத்தி கொளுத்தி மாலையெல்லாம் போடறேன் தெரியுமா?

                                                                               ******

About The Author

2 Comments

Comments are closed.