லக… லக… ஜோக்ஸ் (51)

ஆசிரியர்: ராமு! ‘சூரியன் மறைகிறது’ – இது நிகழ்காலமா, எதிர்காலமா?

ராமு: சாயங்காலம் சார்.

                                                                  *****

தொண்டன் – 1: நம்ம தலைவரையே ஒருத்தன் தலைகுனிய வச்சிட்டானே!

தொண்டன் – 2: யார் அவன்?

தொண்டன் – 1: நம்ம தெருமுனையில இருக்குற சலூன் கடைக்காரந்தான்.

                                                                *****

அமைச்சர்: அரசே! நீங்கள் செய்வது சரியா?

அரசர்: ஏன்? அப்படி என்ன செய்துவிட்டேன்?

அமைச்சர்: மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதற்காக ஹாலிவுட்டில் இருந்து மேக்கப்மேன்களை வரவழைக்கிறீர்களே! இதெல்லாம் உங்களுக்கே ஓவராக இல்லையா?

                                                               *****   

சர்வர்: அந்தப் பழைய பேப்பர்க்காரனுக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரிய மாட்டேங்குது முதலாளி!

முதலாளி: ஏன், எதுக்கு நம்ம ஓட்டல் வாசல்ல வந்து கத்திக்கிட்டிருக்கானாம்?

சர்வர்: "மீந்து போன பேப்பர் ரோஸ்ட்டையெல்லாம் வாரக்கடைசியில மொத்தமா எங்கிட்ட போட்ருங்களேன்"னு கேக்கறான்.

                                                              *****

காதலன்: நேத்து என் கனவுல நயன்தாரா வந்தாங்களே!

காதலி: உங்க கனவுல நயன்தாரா மட்டும்தான் வந்தாங்க. ஆனால் என் கனவுல சிம்பு, ஆர்யா, சூர்யான்னு மூணு பேரும் வந்தாங்களே!

                                                             *****         

About The Author