லக… லக… ஜோக்ஸ் (52)

விருந்தினர்: என்ன சார், உங்க வீட்டு ஸ்டூல் ரொம்ப வித்தியாசமா இருக்கே! எங்க வாங்கினீங்க?

வீட்டுக்காரர்: என் பொண்டாட்டி செஞ்ச மைசூர்பாகு சரியா வரலே. அதை வீணாக்க வேண்டாம்னு ஸ்டூலாக்கிட்டோம்

                                                                       *****

நண்பர் – 1: பையனுக்கு ராஜான்னு பேர் வைச்சது தப்பாப் போச்சு.

நண்பர் – 2: ஏன்? என்ன ஆச்சு?

நண்பர் – 1: குளிக்காம கொள்ளாம, எப்பவும் உடம்பில படையோட சுத்தறான்.

                                                                   *****     

வந்தவர்: என்ன ஜோசியரே, உங்க கிளிக்கூண்டு ரொம்ப சின்னதாயிருக்கே!

ஜோதிடர்: உள்ளே இருக்கிறது வெட்டுக்கிளிங்க.

                                                                 *****
     
நண்பர் – 1: உன் பையன் மொழிப் போராட்டத்துல கலந்துக்கிட்டு ஜெயிலுக்குப் போயிருக்கானாமே! உண்மையாவா?

நண்பர் – 2: ஆமா! பக்கத்து வீட்டு தேன்மொழியைக் காதலிக்கிற போராட்டத்துல கைகலப்பாயி ஜெயிலுக்குப் போயிருக்கான்.

                                                               *****

நபர் – 1: அந்த சினிமா டைரக்டர் விதிகளை தவறாம கடைப்பிடிக்கிறவர்.

நபர் – 2:
அதுக்காக தன் பொண்ணோட கல்யாணத்தைக் கூட டி.வி.டி-ல பார்க்காம தியேட்டர்ல வெளியிட்டுதான் பார்ப்பேன்னு அடம்பிடிக்கிறது நல்லாவா இருக்கு?
 
                                                               *****

About The Author