லக… லக… ஜோக்ஸ் (57)

தோழி – 1: என் முகத்துல நிறைய புள்ளிங்க இருக்கு. என்னடி செய்யலாம்?

தோழி – 2: பேசாம எல்லாப் புள்ளிங்களையும் இணைச்சு ஒரு கோலம் போட்டுடேன்!

*****

பெண் – 1: என் புருஷனோட சினிமா பைத்தியத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.

பெண் – 2: ஏன், என்ன செய்றாரு?

பெண் – 1: வீட்ல இருக்குற பாத்திரங்களைக் கூட கேரக்டர்னுதான் சொல்லணும்னு அடம்பிடிக்கிறாரு.

*****

பெண் – 1: தானே சமையல் செய்யறோம்ங்கிற திமிர் என் புருஷனுக்கு நிறையவே இருக்கு.

பெண் – 2: எப்பிடி சொல்ற?

பெண் – 1: ‘ஏதாவது பேசின, பூரிக்கட்டையாலேயே மண்டையை உடைச்சிருவேன்’னு மிரட்டுறாரு.

*****

பெண் – 1: வர வர என் புருஷங்கூட சண்டை போடப் பயமாயிருக்கு.

பெண் – 2:
ஏன் அடிச்சிடுறாரா?

பெண் – 1:
அந்தத் தைரியமெல்லாம் அவருக்கு இல்லை. ஆனா சமைக்கும்போது உப்பு அதிகமாப் போட்டுப் பழிவாங்கிடறாரு.

*****

About The Author