லக… லக… ஜோக்ஸ் (61)

நபர் – 1: என்ன, உங்க வீட்டுக் கொல்லையில வெடிச் சத்தம் கேக்குது? பொங்கலுக்குக் கூடவா பட்டாசு வெடிப்பீங்க?

நபர் – 2: அட, தீபாவளிக்குப் பத்த வச்சதுதான். இப்பதான் வெடிக்குது.

*****

தோழி – 1: தையக்காரருக்குப் பிடிச்ச மாசம் எது?

தோழி – 2: தை மாசம்.

*****

நண்பன் – 1: பொண்ணு கிளி மாதிரி இருக்காளேன்னு ஆசப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ கஷ்டப்படறேன்.

நண்பன் – 2: ஏன், என்னாச்சு?

நண்பன் – 1: பேசினதையே திரும்ப திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறா.

*****

நண்பன் – 1: குடி குடியைக் கெடுக்கும்ங்கிறது சரியாப் போச்சு.

நண்பன் – 2: எப்படி?

நண்பன் – 1: எனக்குக் கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னைக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா.

*****

தோழி – 1: பேங்க் மேனேஜர் ஒரு பொண்ணு பின்னாடி அலைஞ்சா எப்படி அலைவாரு?

தோழி – 2: லோன் லோன்னுதான்.

*****

About The Author