லக… லக… ஜோக்ஸ் (62)

செய்தியாளர்: என்ன சார், உங்க படத்துல சீனுக்கு சீன் அடிதடியா இருக்கே?

இயக்குநர்: அதான், பத்தாயிரம் அடில எடுத்த படம்னு பிரஸ் மீட்லயே சொன்னோமே!

*****

நர்ஸ் – 1: அந்தப் பேஷண்ட் ரஜினி ரசிகர்னு நினைக்கிறேன்.

நர்ஸ் – 2: எப்படி சொல்ற?

நர்ஸ் – 1: நான் ஊசி போட்டதும் ‘என் வலி தனி வலி’ன்னு சொன்னாரே!

*****

நண்பர் – 1: எதுக்கு நின்னுக்கிட்டே சாப்பிடறீங்க?

நண்பர் – 2: மனைவி சம்பாத்தியத்தில உட்கார்ந்து சாப்பிடறவன்னு என்னை யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க.

*****

நண்பன் – 1: முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுங்கிறது சரியாப் போச்சு.

நண்பன் – 2: எப்படி?

நண்பன் – 1: காலையில மனைவியைத் திட்டினேன், சாயங்காலம் பின்னியெடுத்திட்டா.

*****

நபர் – 1: என்ன இது, திருவோடு ஃபிலிம்ஸுன்னு ஒரு பேரா?

நபர் – 2: ஆமா, நாலைஞ்சு பிச்சைக்காரங்க ஒண்ணா சேர்ந்து மெகா பட்ஜெட்ல எடுக்கிற படமாச்சே!

*****

About The Author