லக… லக… ஜோக்ஸ் (63)

பேட்டியாளர்: 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு ஆச்சரியமா இருக்கு!

எழுத்தாளர் – 2: உங்களுக்கு ஆச்சரியம்; மத்தவங்களுக்கு சந்தேகம்.

******

நண்பன் – 1: சிகை அலங்காரம் பண்ற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?

நண்பன் – 2: பின்னி எடுத்திட்டா.

*****

நபர் – 1: என் மனைவிக்கு என் மேலே கோபம்னா சமைக்கமாட்டா.

நபர் – 2:
உனக்கு பரவாயில்லை. என் மனைவிக்கு என் மேலே கோபமா இருந்தா மட்டும்தான் சமைப்பா.

*****

நண்பர் – 1: ஆபீஸில எல்லாரும் என்னை குத்தம் சொல்றாங்க.

நண்பர் – 2: என்னன்னு?

நண்பர் – 1: தூங்கினா நான் எழுந்துக்கறதேயில்லையாம்.

*****

நண்பன் – 1: உன்னை யாராவது லூஸூன்னு சொன்னா கவலைப்படாதே, வருத்தப்படாதே, ஃபீல் பண்ணாதே.

நண்பன் – 2: வேற என்ன செய்யறது?

நண்பன் – 1: உங்களுக்கு எப்படித் தெரியும்னு கேளு.

*****

About The Author

1 Comment

  1. rishaban

    நண்பன் – 1: சிகை அலங்காரம் பண்ற பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தியே என்னாச்சு?
    நண்பன் – 2: பின்னி எடுத்திட்டா.

    சூப்பர் !

Comments are closed.