லக… லக… ஜோக்ஸ் (66)

கணவன்: ஏண்டி நேத்து ராத்திரி திருடனைப் போட்டு அப்படி அடிச்சே?

மனைவி: இருட்டுல, நீங்கதான் குடிச்சிட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சு அடிச்சுட்டேன்.

*****

நோயாளி: என் காதுக்குள்ள யாரோ பேசற மாதிரி சத்தம் கேக்குது. என்ன செய்யறது டாக்டர்?

டாக்டர்: அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லணும்னு அவசியம் இல்லைங்க.

*****

நண்பன் – 1: மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது.

நண்பன் – 2: ஏன் அப்படி சொல்றே?

நண்பன் – 1:
ஏன்னா மயிலுக்குத் தமிழ் தெரியாது.

*****

ரயிலில் தன்னுடைய பயணச்சீட்டைத் தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருந்த நபரைப் பார்த்து,

பரிசோதகர்: பரவாயில்லை, நீங்க டிக்கெட் வாங்கியிருப்பீங்கன்னு நான் நம்பறேன்.

நபர்: அது கெடக்கட்டும்; டிக்கெட் இல்லைன்னா இப்போ நான் இறங்க வேண்டிய இடம் எப்படித் தெரியறது?

*****

கைதி – 1:
எரிஞ்சுக்கிட்டிருந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சு ஆறு பேரைக் காப்பாத்தினதுக்காக உன்ன ஜெயில்ல போட்டுட்டாங்களா? அக்கிரமமா இருக்கே!

கைதி – 2:
நான் காப்பாத்தினவங்க தீயணைப்பு வீரர்களாமே!

*****

About The Author

1 Comment

Comments are closed.