லக… லக… ஜோக்ஸ் (67)

நண்பர் – 1: ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு நான் நல்லாத் தெரிஞ்சுக்கிட்டேன்.

நண்பர் – 2: எப்படி?

நண்பர் – 1: என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.

*****

மந்திரி: மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?

அரசர்: வேண்டாம்! அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

*****

நண்பன் – 1: நேத்து என் மனைவிக்கும் என் அம்மாவுக்கும் பெரிய சண்டை.

நண்பன் – 2: நீ யார் பின்னாடி நின்ன?

நண்பன் – 1: நான் பத்திரமா பீரோ பின்னாடி நின்னுக்கிட்டேன்.

*****

மனைவி: என்னை பெண் பார்க்க வந்தன்னிக்கு நீங்க டிபனை சாப்பிடவேயில்லையே ஏன்?

கணவன்: ஒரு நாளைக்கு ஒரு ஷாக் போதுமேன்னு நினைச்சேன்.

*****

பெண்: வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க.

பையன்: நம்ம கல்யாணம் பத்திப் பேசறதுக்கா?

பெண்: இல்ல. தினமும் என் பின்னாடியே வர்றீங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்க.

*****

About The Author

1 Comment

  1. வெற்றியரசன்

    ஏனுங்க மனைவியை மட்டுமே குறைசொல்ற மாதிரி பேசுறீங்க…அவங்க என்ன பேயா? பிசாசியா? என்ன சொல்னாலும் நாம அவங்க கட்டுபாட்டுல தாங்க இருக்கனும். இல்லைன்னா மாமனாரு நம்ள ரவுண்டு கட்டிடுவாருங்க.! பீரோ பின்னாடி நின்கறது நல்லா இல்ல. வேலை ஆவனும்னா பீரோக்கு முன்னாடி மந்திரம், வேலையில்லன்னா பீரோக்கு பின்னாடி தந்திரம்.

Comments are closed.