லக… லக… ஜோக்ஸ் (68)

நபர் – 1: ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ‘மசாலா’ படங்கள் எடுக்கிறதில்ல?

நபர் – 2: வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.

******

நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப சுவையா இருக்கே!

எழுத்தாளர்: கிச்சன்லே சமையல் பண்ணும்போது எழுதினதாச்சே!

******


ஆசிரியர்
: உங்க அப்பா ராத்திரி படுக்கும் முன் சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில் எழுந்து பார்க்கும்போது நூறு ரூபா அப்படியே இருக்கு. இதிலிருந்து உனக்கு என்ன தெரியுது?

மாணவன்: எங்க அண்ணன் ஊரில் இல்லைன்னு தெரியுது சார்!

******

நண்பன் – 1: ஏன் இவ்வளவு அவசரம் அவசரமாக பெயிண்ட் அடிக்கிற?

நண்பன் – 2: பெயிண்ட் தீர்றதுக்குள்ள அடிச்சுடணும்னுதான்.

******

நபர் – 1: 22ஆம் நம்பர் பஸ் எங்க வரும்?

நபர் – 2: ரோட்லதான்.

******

About The Author