லக.. லக… ஜோக்ஸ் (69)

மனைவி: என்னங்க, செருப்பு காலை கடிக்குது?

கணவன்: அப்போ சாயங்காலமாப் போட்டுக்கோ.

******

நபர் – 1: என்னோட தாத்தா 55 வயசுல செத்தாரு. என்னைப் பாரு! 65 வயசு. இன்னும் நல்லபடியா இருக்கேன்.

நபர் – 2: ரெண்டுமே வருத்தப்பட வேண்டிய விஷயந்தான்.

******

நபர்: சார்! ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே, என்ன ஆச்சு?

வங்கி அதிகாரி: டபுள் ஆகும்னு சொன்னேன். திருப்பித் தர்றதா சொல்லலியே.

******

நடிகை: நான் இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா டாக்டர்?

டாக்டர்: எதுக்கு?

நடிகை: ஒரு மெகா சீரியல்ல கதாநாயகியா நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.

******

மாணவன் – 1: வர வர நம்ம டீச்சருக்கு ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது.

மாணவன் – 2: எப்படிடா சொல்ற?

மாணவன் – 1:
திருக்குறளை அவங்களே போர்டுல எழுதிட்டு, இதை எழுதினவர் யாருன்னு கேட்கிறாங்களே!

******

About The Author

1 Comment

  1. வெற்றியரசன்

    என்னது..! உன்னைப் பெண் பார்க்க வந்தவரோட நாற்பது பேர் வந்தாங்களா? மாப்பிள்ளை பேர் என்ன?
    மாப்பிள்ளையோட 41 பேர் வந்தாங்க, அலிபாபாவைத் தவிர்த்து மீதி நாற்பதும் *********
    மாப்பிள்ளை பேரை மாத்திக்கோப்பா இப்பவாவது, காலம் உண்மையிலே கெட்டுப் போச்சு சார்

Comments are closed.