லக… லக… ஜோக்ஸ் (70)

பெண்-1: அதான் டீ.வி-யிலே நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாப் போச்சு.

பெண்-2: ஏன், என்னாச்சு?

பெண்-1: ஓசி பேப்பர் வாங்க வர்ற பக்கத்து வீட்டுக்காரரு, இப்ப டீ.வி-யையும் ஓசி கேக்க ஆரம்பிச்சுட்டாரு.

******

நண்பன்-1: மச்சி உன் வயசு பதினெட்டுதானே?

நண்பன்-2: எப்படிடா கரெக்டா கண்டுபிடிச்சே?

நண்பன்-1: ஏன்னா, என் பக்கத்து வீட்டுல இருக்குற அரை லூசோட வயசு ஒன்பது.

******

காதலன்: நாம ரெண்டு பேரும் ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?

காதலி: நானும் எப்போ நீ இதைப் பத்தி பேசுவேன்னு காத்திட்டிருந்தேன். இப்போ கேக்கறேன், எப்போ உன் கல்யாணம்?

******

சேவகன்: மன்னா, நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள்.

மன்னன்: பலே! பலே! எந்தப் பெண் அம்மா ஆகியிருக்கிறாள்?

******

நபர் : எனக்கு ஒரு அம்பதாயிரம் ரூபா கடன் கிடைக்குமா சார்?

கடன் கொடுப்பவர்: ஊர் பேர் தெரியாதவனுக்கெல்லாம் நான் கடன் கொடுக்கிறதில்லை.

நபர் : என் பேரு கந்தசாமி, சொந்த ஊரு பழனி. இப்ப தரீங்களா?

******

About The Author