லக.. லக… ஜோக்ஸ் (74)

நபர்-1: பையன் பட்டாசு கேட்டதுக்காகவா இப்படி போட்டு அடிக்கறீங்க?

நபர்-2: நீங்க வேற ஸார், கார் பாம்தான் வேணும்னு அடம்பிடிக்கிறான்.

======

மகன்: அப்பா நான் மேலே படிக்க ஆசைப்படறேன்.

அப்பா: சரி. மேஸ்திரிகிட்டே சொல்லி மாடியில உனக்கு ரூம் கட்டித் தரச் சொல்றேன்.

======

நண்பர்-1: ஜோசியர் உங்களுக்கு யோகம் அடிக்கும்னு சொல்லியிருந்தாரே, ஏதாவது நடந்ததா?

நண்பர்-2: ஓ! நேத்து எனக்கும் என் மனைவி யோகத்துக்கும் பயங்கர சண்டை. கடைசியில் அவ என்னை அடிச்சிட்டா.

=====

நண்பன்: கிணத்துல விழுந்த பொருளை கஷ்டப்பட்டு மேலே தூக்கின நீ, எதுக்குடா மறுபடியும் அதைக் கிணத்துலேயே போட்ட?

நண்பன்: எடுத்ததை எடுத்த இடத்துல வைக்கணும்னு எங்க அப்பா சொன்னது திடீர்னு ஞாபகத்துக்கு வந்தது.

=====

நபர்-1: சார்! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும். வீட்டுக்கு வரலாமா?

நபர்-2: ஐயையோ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. ஆபீசுக்கே வந்துடுங்க. ஒரு மணி நேரம் என்ன ரெண்டு மணி நேரம் கூட பேசலாம்.

======

About The Author