லக… லக… ஜோக்ஸ் (75)

தொண்டன்-1: எல்லாப் பதவியையும் தானே அனுபவிக்கணும்னு தலைவருக்கு ஆசை.

தொண்டன்-2: அதுக்காக பொம்பளை வேஷம் போட்டுக்கிட்டு, மகளிர் அணிச் செயலாளர் பதவியிலும் அவரே இருக்கிறதெல்லாம் கொஞ்சம் ஓவர்.

=====

பெண்-1: எதிர்த்த வீட்டு பொண்ணு ஓடிப்போச்சே, அதுக்கப்புறம் என்ன ஆச்சு?

பெண்-2: இதுக்கு மேலே விவரம் வேணும்னா என் பிளாக்ல பார்த்துக்கோடீம்மா!

=====

ஆசிரியர்: எந்த பறவை நல்லாப் பாடும்னு சொல்லு பார்க்கலாம்.

மாணவன்: பறவை முனியம்மா சார்!

=====

அமைச்சர்: அரசே! இவர்களிருவரும் உங்களைக் கோழை என்றும் புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசியதை நான் கேட்டேன்.

அரசர்: ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை உடனே பாசறையில் அடையுங்கள்!

=====

நபர்-1: மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம யாரோ ஒருத்தர் விசில் அடிச்சதும் கட்டுறார்?

நபர்-2: மாப்பிள்ளை பஸ் டிரைவராம்!

======

About The Author