லக… லக… ஜோக்ஸ் (789)

நண்பன்-1: முடி கொட்றதுக்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா?

நண்பன்-2: என்னது?

நண்பன்-1: முடி இருக்கிறதுதான்.

=====

நபர்-1: அவர் ஏன் காரை ரிவர்ஸ்லேயே ஓட்டிட்டு போறார்?

நபர்-2: காரை விக்கும்போது கிலோமீட்டர் குறைவா காண்பிக்கணுமாம்.

=====

போலீஸ்: கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம். இதுல என்ன திமிர் இருந்தா 1000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே?

குற்றவாளி: என்னங்க செய்யறது, குடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா 0001ன்னு அடிச்சிட்டோம்.

====

நபர்: தம்பி! அங்க பாரு! பசங்களெல்லாம் பந்தை எடுத்துக்கிட்டு அங்கேயும் இங்கேயும் ஓடி விளையாடுறாங்க. நீ மட்டும் இப்படி தனியா ஒரே இடத்துல நிக்கலாமா, சொல்லு?

மாணவன்: ஐயோ! நான் கோல் கீப்பருங்க.

====

நபர்-1: ஓட்டப்பந்தயத்துல ஜெயிச்சவங்களுக்கு ஊக்க மருந்து சோதனை செய்யறாங்க, சரி. ஆனா, கடைசியில் வந்தவங்களையும் ஏன் சோதனை செய்யறாங்க?

நபர்-2: இவங்க தூக்க மருந்து சாப்பிட்டு இருப்பாங்களோன்னுதான்.

====

About The Author