லக.. லக… ஜோக்ஸ் (79)

போலீஸ்: டெய்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ரெண்டு வேளையும் கையெழுத்து போட்டுட்டு போகணும், தெரியுதா?

திருடன்: ஓ! கையெழுத்து போட்டுட்டு நான் வழக்கம்போல திருடப் போலாங்களா?

*****

நபர்-1: ஏன் சார், நீங்க எழுதின ஒரு ஜோக்குக்குக் கூட சிரிப்பே வரலியே?

நபர்-2: பிறர் சிரிக்கும்படியான காரியத்தை செய்யாதேன்னு எங்க பாட்டி அடிக்கடி சொல்வாங்க.

*****

நபர்: உங்க இளமைக்கும் ஆரோக்கியத்துக்கும் என்ன காரணம்?

ஓட்டல் ஓனர்: ஒருநாள் கூட என்னோட கடையில நான் சாப்பிட மாட்டேன், அதான்.

*****

நீதிபதி: என்ன இது! கைதிகளை இப்படி முதுகு வளைஞ்ச நிலைலே கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வர்றீங்க? இப்படியா ட்ரீட் பண்றது?!

போலீஸ்: சாரி யுவர் ஆனர்! நாங்க இவங்களை மடக்கிப் பிடிச்சதால இந்த மாதிரியாகிட்டாங்க.

*****

நபர்-1: எங்க ஆபீஸ்ல மானேஜர் இருக்காரு, கிளார்க் இருக்காரு…

நபர்-2: இதெல்லாம் எதுக்கு எங்கிட்ட வந்து சொல்றீங்க?

நபர்-1: நீங்கதானே படிச்சிட்டு யாராவது வேலையில்லாம இருந்தா சொல்லச் சொன்னீங்க.

*****

About The Author