லக… லக… ஜோக்ஸ் (8)

நோயாளி : டாக்டர்! சொறியும்போது எனக்குப் பொரிப் பொரியா வருது.

டாக்டர் : அதிசயமா இருக்கே! இன்னும் கொஞ்சம் நல்லா சொரிங்க, பொட்டுக்கடலை, பட்டாணியெல்லாம் வருமான்னு பார்க்கலாம்!

************

மனைவி : என்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க, போன ஜென்மத்தில நீங்க என்ன புண்ணியம் செஞ்சீங்களோ!

கணவன் : சத்தியமாத் தெரியாது. ஆனா, மறுபடியும் அந்தத் தப்பைக் கண்டிப்பாப் பண்ண மாட்டேன்.

************

நோயாளி : டாக்டர்! நான் அடிக்கடி, எடுத்ததுக்கெல்லாம் டென்ஷனாயிடறேன். என்ன செய்யறதுன்னே தெரியலை. நீங்கதான் எப்படியாவது சரி பண்ணனும்.

டாக்டர் : அப்படியா?… எங்கே, உங்க உடம்புக்கு என்ன செய்யுதுன்னு இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க!

நோயாளி : போடாங்க…! இப்போதானே எல்லாம் சொன்னேன். லூஸூ மாதிரி கேள்வி கேக்கறே! அறிவில்ல?

************

தந்தை : யாருடா இந்தப் பொண்ணு?

மகன் : என்னோட கேம்பஸ் செலக்ஷன்பா!

************

மனைவி : ஏங்க! சமையல்கட்டிலேருந்து கொஞ்சம் உப்பு கொண்டு வரீங்களா?

(சமையலறைக்குச் சென்ற) கணவன் : உப்பு இங்க இல்லியே!

மனைவி : நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியும். அதனாலதான் நான் கையோட கொண்டு வந்துட்டேன்.

************

About The Author