லக… லக… ஜோக்ஸ் (81)

நோயாளி: டாக்டர்! எனக்கு தினமும் 16 மணி நேரம் தூக்கம் வருது! அலுப்புதானே காரணம்?

டாக்டர்: இல்ல… ‘கொழுப்பு’.

=========

மகன்: அம்மா! அப்பாவை எங்க தேடியும் காணோமே?

அம்மா: ஏண்டா மொய் எழுதற எடத்துல தேடினே? பந்தியிலே தேடிப் பாரு கிடைப்பாரு!

=========

நண்பன்-1: என் மனைவி திருவள்ளுவரை விட உசந்தவ!

நண்பன்-2: எப்படிடா சொல்ற?

நண்பன்-1: திருவள்ளுவர் எதுவா இருந்தாலும் ரெண்டே அடியில புரிய வெப்பாரு. ஆனா, என் மனைவி ஒரே அடியில புரிய வெச்சிடுவா!

==========
ஆசிரியர்: பத்து விரலையும் நீட்டு!… நீட்டிட்டியா? இப்ப இதுல எட்டு போச்சுன்னா என்ன வரும்?

மாணவன்: ரத்தம் வரும் சார்!

=========

மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?

கணவன்: பருப்பும் சாதமும்.

மனைவி: நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்?

கணவன்: அப்படின்னா கத்திரிக்காய் வறுவல்…?

மனைவி: உங்க பையனுக்குப் பிடிக்காது.

கணவன்: முட்டைப் பொரியல்…?

மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை.

கணவன்: பூரி…?

மனைவி: நைட்ல எவனும் பூரி சாப்பிட மாட்டான்.

கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?

மனைவி: ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா உடம்புக் கெட்டுப்போகும்.

கணவன்: மோர்க்குழம்பு…?

மனைவி: வீட்ல மோர் இல்ல.

கணவன்: இட்லி சாம்பார்…?

மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்.

கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.

மனைவி: சாப்பிட்ட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.

கணவன்: வேற என்னதான் சமைக்கப் போறே?

மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.

கணவன்: மறுபடியும் மொதல்லயிருந்தா?

========

About The Author