லக… லக… ஜோக்ஸ் (85)

நண்பர்-1: ஏகப்பட்ட நாய்ங்க அவரைச் சுத்தி நிக்குதே?!

நண்பர்-2: நான் சொல்லலை, அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு?

========

டாக்டர்: மேடம்! உங்க உடம்பு குறையணும்னா நீங்க கட்டாயம் டயட்ல இருந்தே ஆகணும்.

பெண்: ஐயய்யோ! அப்போ என் வீட்ல இருக்கக் கூடாதா டாக்டர்?

========

மனைவி: உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு கல்யாணத்துக்கு முன்னாடியே ஏன் என்கிட்டே சொல்லலை?

கணவன்: நான்தான் சொன்னேனே, உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு.

========

நண்பர்-1: உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா?

நண்பர்-2: இருக்கே!

நண்பர்-1: அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க!

நண்பர்-2: அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

நண்பர்-1: அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே!…

========

நபர்-1: என்ன சார், உங்க பையன் தாத்தா மேலே ஏறிப் படுத்துட்டு இருக்கான்?!

நபர்-2: நான்தான் சொன்னனே, எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு.

========

About The Author