லக… லக… ஜோக்ஸ் (89)

நபர்-1: ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டுப் போறதுக்குள்ள வாசப்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு!

நபர்-2: அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு!

******

மாணவன்-1: மச்சி! இன்னைக்கு என்ன எக்ஸாம்டா?

மாணவன்-2: கணக்குப் பரீட்சைன்னு நினைக்கிறேன்டா!

மாணவன்-1: எப்படிடா கண்டுபிடிச்சே?

மாணவன்-2: என் பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட கால்குலேட்டர் இருந்துச்சுடா மச்சி!

மாணவன்-1: நீ ரொம்ப புத்திசாலிடா மாப்ள!

******

மாப்பிள்ளை: கவலைப்படாதீங்க மாமா! உங்க பொண்ணை நான் கண் கலங்காம பார்த்துக்கறேன்!

மாமனார்: அட நீங்க வேற மாப்பிள்ளை! நான் கவலைப்படறது, பாவம்… உங்களுக்காகத்தான்! ம்ம்ம்… நாங்க தப்பிச்சோம்… நீங்க என்ன பாடு படப் போறீங்களோ!…

******

நோயாளி: கிளினிக்ல எதுக்கு 12 ராசிகளோட பேரையும் டாக்டர் எழுதி வெச்சிருக்கிறாரு?

நர்ஸ்: ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான்!

******

நபர்-1: பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை.

நபர்-2: நிஜமாவா?

நபர்-1: ஆமா. செக்கிங் ஏறினாதான் கவலை.

******

About The Author