லக… லக… ஜோக்ஸ் (9)

ஆசிரியர் : பசங்களா! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம உயிர் வாழறதுக்கு ரொம்பத் தேவையான ஆக்ஸிஜனை 1773ல கண்டுபிடிச்சாங்க.

மாணவன் : நல்லவேளை டீச்சர்! நான் அதுக்கப்புறம் பிறந்தேன். முன்னாடி பிறந்திருந்தா ஆக்ஸிஜன் இல்லாம செத்துப் போயிருப்பேன்.

************

அம்மா : என்னடாம்மா! முதல் நாள் ஸ்கூல் எப்படியிருந்தது?

குட்டிப் பெண் : என்னது முதல் நாள் ஸ்கூலா! அப்பிடீனா இனிமே தினமும் என்னை ஸ்கூலுக்குப் போகச் சொல்லுவியா?

************

ஆசிரியர் : "மாணவர்கள் பள்ளியில் நன்றாகப் படித்தார்கள்". பப்பு, இந்த வாக்கியம் சரியா? சொல்லு பார்க்கலாம்!

பப்பு : இதைப் பத்தி நீங்க என்ன நெனைக்கிறீங்க சார்?

ஆசிரியர் : நான் எதையும் நெனைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு பதில் தெரியும்.

பப்பு : அதையேத்தான் நானும் சொல்றேன்.

************

ஆசிரியர் : என்னாச்சு பப்பு? ஏன் லேட்?

பப்பு : நான் ஸ்கூலுக்கு வர்ற வழியில ஒருத்தர் நூறு ரூபாயைத் தொலைச்சிட்டு தேடிக்கிட்டு இருந்தாரு.

ஆசிரியர் : நீயும் அவரோட சேந்து தேடுனதால லேட்டாயிடுச்சா?

பப்பு : இல்லை டீச்சர்! அந்த நூறு ரூபாய் என் காலுக்கு அடியிலதான் இருந்துது. அதனாலதான் லேட்டாச்சு.

************

நபர் – 1 : அங்க குட்டை முடியோட, சிவப்பு சட்டையும், நீல ஜீன்ஸுமா ஒரு பையன் நிக்கறானே தெரியுதா?

நபர் – 2 : அது பையன் இல்ல; என் பொண்ணு.

நபர் – 1 : மன்னிச்சிடுங்க சார்! நீங்கதான் அவ அப்பான்னு தெரியாது.

நபர் – 2 : நான் அவ அப்பா இல்லை. அம்மா!

About The Author